81 பொருட்களுக்கு வரி விலக்களிப்பு!

புதிய வற் வரி திருத்தச் சட்டத்தின் கீழ், சுகாதாரம், வீடமைப்பு, சீனி, பால் பொருட்கள், வைத்தியசேவை மற்றும் திறன்பேசிகள் உள்ளிட்ட 81 பொருட்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அஞ்சல், நிலையான தொலைபேசி, மதுபானம் மற்றும் சிகரட் ஆகியவை வற் வரிக்கு புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளன.எனினும் 81 விடயங்களுக்கு வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வற் வரி திருத்தச் சட்ட மூலம் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வரி விலக்களிக்கப்பட்ட பொருட்கள் வருமாறு
கோதுமை மாவு, அரிசி, சீனி, பருப்பு, கோதுமை, உலர்ந்த, டின் மீன், மாசி, மசாலா, பாண், திரவ பால், தேயிலை, இறப்பர், தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், இறால், முட்டை, நெத்தலி, பழங்கள், மரக்கறி, கிழங்கு, கூனிக் கருவாடு, சிவப்பு வெங்காயம், வெள்ளைப்பூடு, பெரிய வெங்காயம், கடலை, மிளகாய், கௌபி, பயரம் பருப்பு, உளுந்து, கொத்தமல்லி, நிலக்கடலை, உரம், மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் இயந்திரங்கள், மருந்துக் கருவிகள், மருந்து பேக்கேஜிங் உபகரணங்கள், ஆயுர்வேத மருந்துகள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காது கேட்காதோறது உபகரணங்கள், வெள்ளைப்பிரம்பு, பிரெயில் இயந்திரம், பிரெயில் கடதாசி, கண்ணாடி, பொருட்கள் உற்பத்தி கண்ணாடிகள், வெளிநோயாளர் சேவைகள், கசிவு சேவைகள் மற்றும் நோய் அறிகுறிகள் கண்டறியும் சோதனைகள், அறுவை சத்திரசிகிச்சைகள், சீசர் அறுவைசிகிச்சை, போக்குவரத்து சேவைகள், டீசல், மண்ணெண்ணெய், பெற்றோல், விமான எரிபொருள். வாகனங்கள் தயாரிப்பு, பவுசர், விவசாய விதைகள், விவசாய தாவரங்கள், விவசாய இயந்திரங்கள், டிராக்டர், பேக்கரி இயந்திரங்கள், மீன்பிடி உபகரணங்கள், பசுமை இல்ல திட்டம், மற்றும் அரைக்கும் இயந்திரங்கள், பால் பதப்படுத்தும் இயந்திரங்கள், மின்சாரம், சூரியசக்தி, விளக்கை பாதுகாக்கும் பவர், கணினி துணைக் கருவிகள், கல்வி சேவைகள், கணினி மென்பொருள், விளையாட்டு உபகரணங்கள், ஆயுள் காப்பீடு, அச்சிடப்பட்ட புத்தகங்கள், கையடக்க தொலைபேசிகள், மாணிக்கம், முத்து, வைரம், தங்கம், பிளட்டினம், நூலக சேவைகள், வீடமைப்பு உபகரணங்கள் கூலிக்கு அல்லது வாடகைக்கு அளிக்கையில் என மேற்குறித்த பொருட்களுக்கு வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|