8 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!
Thursday, July 12th, 2018
தற்போதைய காலநிலை மற்றும் அவ்வப்போது ஏற்படும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்தியநிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்றும்(12) நாளையும்(13) விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
8 மாவட்டங்களில், தெரிவுசெய்யப்பட்ட 54 வலயங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்திய நிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
நடமாடும் விற்பனை வாகனங்கள் பரிசோதனை!
சுவாச பிரச்சினை: வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் திடீர் மரணம்!
எத்தனை நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெளிவுபடுத்த வ...
|
|
|


