70 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் பாய்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு – 23 பேர் வைத்தியசாலையில்!

பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து பாலத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரியவருகின்றது. இதனிடையே குறித்த பேருந்து ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மதங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்த பாடுபடுகின்றோம் – பிரதமர்!
விரைவில் மாகாண சபைத் தேர்தல் – ஜனாதிபதி!
பிரதமர் தலைமையில் 'குரு அபிமானி' வேலைத்திட்டம் அலரிமாளிகையில் ஆரம்பம்!
|
|