7 இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு!
Saturday, July 15th, 2017
13 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக 7 இலட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர், மறைமுக தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஓக்டோபர் மாதம் முதல் வாரம் வரை வரட்சி காலநிலை நிலவும் பிரதேசங்களுக்கு தேவையான மழை கிடைக்காது என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் ஆகிய மாகாணங்கள், வரட்சி காலநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வரட்சியால் கடுமையாக பாதிக்கப்படாத தென்மேற்கு மற்றும் தென் மாகாண பகுதிகளில், தேவையான மழை எதிர்வரும் மாதம் மாத்திரம் கிடைக்காது என, அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!
40 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் 09 பேர் கைது!
உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளான விவகாரம் - கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற...
|
|
|


