630 பாடசாலைகள் மீது சுகாதார வழக்கு !
Saturday, May 6th, 2017
சுகாதார அச்சுறுத்தல் காரணமாக மேல் மாகாணத்தின் 106 பாடசாலைகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பாடசாலைக் கட்டடங்களில் டெங்கு அச்சுறுத்தல் குறித்த ஆய்வொன்று கடந்த வாரம் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த ஆய்வு நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன் கீழ், மேல் மாகாணத்தின் பாடசாலைகளுக்குச் சொந்தமான 10,089 கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், நுளம்பு அச்சுறுத்தல் காணப்பட்ட 630 பாடசாலைகளுக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 106 பாடசாலைகள் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன
Related posts:
இலங்கைக்கு மற்றுமொரு சான்றிதழ் !
விஞ்ஞான பிரிவில் உயர்கல்வியை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கல்வியமைச்சு!
வாகன இறக்குமதித் தடை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவதற்கு தயாராகும் இறக்குமதியாளர்கள்!
|
|
|


