52 அரச நிறுவனங்களினால் 8600 கோடி ரூபாய் நட்டம் – நிதி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டு!
Sunday, December 4th, 2022
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த 420 அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வியாபார நிறுவனங்கள் 52 பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக நிதி அமைச்சின் சமீபத்திய அறிக்கைகள் காட்டுகின்றன.
அதிக நட்டத்தைச் சந்திக்கும் 52 அரச நிறுவனங்களின் வருடாந்த நட்டம் சுமார் 8600 கோடி ரூபாய் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவைக்கு தெரிவிக்கும் வகையில், உரிய நிறுவனங்களின் பட்டியலையும், அவற்றால் ஏற்பட்ட நஷ்டம் குறித்த முழு விவரங்களையும் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கடும் நஷ்டத்தில் உள்ள நிறுவனங்களை விரைவாக மறுசீரமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஊடக நகரம் அமைக்கத்திட்டம்!
தூக்குத் தண்டனை முடிவைக் கைவிட வேண்டும் - பன்னாட்டு நீதிபதிகள் ஆணையம்!
கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு செக் குடியரசு பங்களிப்பு செய்யும் – இலங்கைக்கான தூதுவர் உறுதி...
|
|
|


