500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் மோடி அறிவிப்பு!

தவறுகளை களைய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளதால் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக நாட்டின் 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்கள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாது என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று மற்றும் நாளை இந்திய வங்கிகளின் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நாட்டில் பல இடங்களில் இயங்காது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கையிருப்பில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் அதனை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 11 ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Related posts:
நீதிமன்று அதிரடி - நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை!
மீண்டும் பயங்கர தாக்குல்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கும் கலகொடஅத்தே ஞானசார தேரர்!
கடனுக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா நிபந்தனையை முன்வைக்கவில்லை - அமைச்சர் டலஸ் ...
|
|