5 மாணவர்கள் பலி: வைத்தியசாலை பணிப்பாளர் புதிய தகவல்!

Thursday, August 31st, 2017

 

சிறுத்தீவு கடலில் படகு மூழ்கி ஆறு மாணவர்களின் உயிரிழப்பு  நீரில் மூழ்கியதனாலேயே ஏற்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்

உயிரிழந்த மாணவர்கள் மது அருந்தியமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி இருந்தன.குறித்த ஆறு மாணவர்களும் மது அருந்தியிருந்தார்களா என்பது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

மது அருந்தியுள்ளார்களா? என அறிந்து கொள்ள மாணவர்களின் உடல் கூறுகள் எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியலிங்கம் மேலும் கருத்து வெளியிடுகையில், உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய மாணவர்கள் நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளார்கள் என்பது சட்ட வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவர்களின் உடல்கூற்று மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவர்கள் இறப்பதற்கு முன்னர் ஏதாவது அருந்தியுள்ளார்களா? என்பதை அறிந்து கொள்வதற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே அவர்கள் ஏதாவது அருந்தியுள்ளார்களா? என்பதை உறுதியாக வெளிப்படுத்த முடியும் என கூறினார்.

Related posts: