முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான புதிய செயற்திட்டத்திற்கு சாரதிகள் எதிர்ப்பு!

Tuesday, September 27th, 2016
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான புதிய செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் அசோக அபேசிங்க நேற்று(26) தெரிவித்தார்.

அதாவது, முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு அவர்களது சாரதி அனுமதிப்பத்திரம் தவிர்ந்த passenger transport எனும் மற்றுமொரு அனுமதிப்பத்திரம் ஒன்று வழங்கப்படவுள்ளது. குறித்த அனுமதிப்பத்திரத்தினை அடையாளம் காண “PT” எனக் குறிப்பிடப்படவுள்ளது. மேற்குறித்த செயற்திட்டமானது அரச மோட்டார் திணைக்களத்தினால் மேற்க்கொள்ளப்படவுள்ளது.

மேலும், குறித்த அனுமதிப்பத்திரம் வழங்க முன்னர் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. எனினும் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பாக முச்சக்கர வண்டி சங்கம் மத்தியில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

முச்சக்கர வண்டி தொழிலை முறைப்படுத்த புதிய பலவிடயங்கள் செய்ய வேண்டியுள்ள நிலையில், அமைச்சு மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக முச்சக்கர வண்டி சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

5936364-Three_wheelers-0

Related posts: