5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைவு!

கடந்த வருடம் இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ளது.
எதிர்வரும் ஏழாம் திகதியுடன் இந்த கால அவகாசம் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏழாம் திகதிக்கு முன்னர் அவை உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டு மீண்டும் அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சஜீனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்
மாணவர்களின் நலன் கருதி வட மாகாண ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!
சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணத...
|
|