406 புதிய வைத்தியர்கள் நியமனம் – மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலையிலும் திருத்தம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!
Tuesday, June 13th, 2023
எதிர்வரும் இரண்டு வாரங்களில் சுகாதார சேவைக்கு புதிதாக 406 வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மாதத்தில் தாதியர் சேவைக்காக 2200 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மருந்தின் விலையை நாளை மறுதினம் முதல் 16 வீதத்தால் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு 03 மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலை மீளாய்வு செய்யப்படும் எனவும் சுகாதார அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது பதவில் இருந்து இராஜினாமா!
நோயாளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சம்பவம்!
வல்வெட்டித்துறையில் நடந்த இந்திர விழா: ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வு!
|
|
|


