40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை இலங்கை வந்தடையும் – 10 ஆம் திகதிமுதல் உர விநியோகம் ஆரம்பம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!
Friday, July 8th, 2022
இந்தியாவிலிருந்து கடன் அடிப்படையில் பெறப்படும் 40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை (09) இலங்கைக்கு எடுத்துவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, அடுத்த இரண்டு நாட்களுக்குள் 25,000 மெட்ரிக் தொன் உரம் கொழும்பிற்கு எடுத்து வரப்படவுள்ளது. இந்தநிலையில் உர விநியோகம் ஜூலை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைமுதல் ஆரம்பமாகும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பெருப்போகத்துக்கு தேவையான உர இருப்புக்களை விநியோகிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தீர்வு கிடைக்கவில்லை - போராட்டம் தொடர்கிறது!
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இலங்கையில்!
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு!
|
|
|


