4 மாதங்களில் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரியா பயணம் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Tuesday, April 30th, 2024

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2,064 பேர் தென் கொரிய வேலைகளுக்கு புறப்பட்டுள்ளனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்கு 1708 பேர் வெளியேறியுள்ளனர். மீன்பிடி தொழிலுக்கு 351 பேர் மட்டுமே சென்றுள்ளனர். அதேபோன்று கட்டுமானத் துறைக்காக 5 பேர் தென்கொரியாவுக்கும் சென்றுள்ளனர்.

இவர்களில் 1,892 பேர் முதல் தடவையாக தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதுடன், 41 யுவதிகளும் இதே காலப்பகுதியில் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: