37,500 மெட்ரிக் டன் எரிபொருளுடன் கப்பலொன்று இலங்கை வருகை!

37, 500 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று நாளைமறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது.
அத்துடன், குறித்த அளவான எரிபொருள் தாங்கிய மற்றுமொரு கப்பல் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து, 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் மற்றும் விமான எரிபொருள் என்பவற்றை தரையிறக்கும் பணிகள் நேற்று (25) மாலை ஆரம்பிக்கப்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், இன்றையதினம் 3,650 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நிலங்களை விடுவிக்க துரித நடவடிக்கை - முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்!
பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பெண்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!
துருக்கியில் இருந்து இறக்குமதியாகின்றது கோதுமை மா - விலை குறையும் சாத்தியம் என இறக்குமதியாளர்கள் தெர...
|
|