37, 500 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் டொலர் செலுத்தி விடுவிக்கப்பட்டது – இரண்டு நாட்களில் டீசல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் – வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Wednesday, February 23rd, 2022
டொலர் பற்றாக்குறை காரணமாக விடுவிக்க முடியாமல் இருந்த 37, 500 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய சிங்கப்பூர் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த கப்பலின் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு நேற்றிரவு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்றையதினம் குறித்த கப்பலில் இருந்து டீசலை தரையிறக்க முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ர் ஒல்கா தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் இரண்டு நாட்களில் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
000
Related posts:
முதல் காலாண்டில் மின்சார சபைக்கு 5781 மில்லியன் ரூபா நட்டம்!
நவம்பர் முதல் தொலைபேசி அழைப்புகளுக்கு விசேட வரிகள்?
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கைது செய்ய முற்பட்டதா? - திறந்த நீதிமன்றில் ஓடிவந்து பெண் முறைப...
|
|
|


