36 ஆயிரம் பேருக்கு மின் இணைப்புக்களை வழங்க முடியவில்லை – மின்சார சபை தெரிவிப்பு!

நாடளாவிய ரீதியில், 36 ஆயிரம் மின் இணைப்புக்களை வழங்க முடியாதுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் விநியோகத்துக்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, வங்கிகளில் நாணயக் கடிதங்கள் விடுவிக்கப்படாமையால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும், பொதுமக்கள் கோரியுள்ள 36 ஆயிரம் மின் இணைப்புகளும், கைத்தொழில் துறைக்கான ஆயிரத்து 200 மின் இணைப்புகளும் வழங்கப்படவில்லை.
மின்பிறப்பாக்கி, வயர், மீற்றர் என்பனவற்றைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளது. இதன் காரணமாக, நாட்டுக்கு பாரிய நட்டம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அனந்தி,சிவகரன்,ஆகியோரது பதவிகள் பறிப்பு!
தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!
கல்வி முறையில் மாற்றம் - திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு...
|
|