35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கரவண்டி ஓடத்தடை!

பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்படி முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயமாக்கப்படவுள்ளது.
விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
சாரதியின் வயது 35ஆக காணப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த வருட இறுதிக்கு முன்னர் கட்டாயப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவசியமான நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு அமெரிக்க முழுமையான ஒத்துழைப்பு - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்....
காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று – இழுத்து மூடப்பட்டன சங்கானை சாராயக்கடையும் மீன் சந்தையும் - 40 ...
பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜப...
|
|