31ஆம் திகதி முதல் மட்டக்களப்பு வான்படை தளம் சிவில் வான்படை அதிகார சபையின் கீழ்!
Wednesday, May 17th, 2017
எதிர்வரும் 31 ம் திகதி முதல் மட்டக்களப்பு வான்படை தளம் சிவில் வான்படை அதிகார சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக தனியார் வர்த்தக வானூர்திகள் அங்கு தரையிறங்க அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டு வானூர்திகள் மட்டும் மட்டக்களப்பு வானூர்தி நிலையத்தை பயன்படுத்தி வந்தன. இந்த நிலையில், தனியார் மற்றும் வர்த்தக நோக்கிலான ஜெட் வானூர்திகள் அங்கு தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக சிவில் வானூர்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிமலசிறி தெரிவித்துள்ளார்.
Related posts:
வருகிறது புதிய அனுமதிப்பத்திர முறை?
4 நிலைப்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் - ஒரு நிலைப்பாட்டிற்கு வருமாறு ஜனாதிபதி அறி...
சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
|
|
|


