30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்றுமுதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமைமுதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசியாக இலங்கை மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதன்படி, இன்றையதினம் கொழும்பு நகரப் பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டன..
இந்நிலையில், தடுப்பூசித் திட்டத்தின் முகாமைப் பொறுப்பு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதிமுதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாட்டில் 29 இலட்சத்து 16 ஆயிரத்து 330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளத...
கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் - பொதுமக்களிடம...
உக்கிரமடைந்து வரும் ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் - தீர்வு காண உலகளாவியஒற்றுமை அவசியம் என ஜனாதிபதி ரணில் வ...
|
|