30 ஏக்கர் காணியை அம்பேவளை பண்ணைக்கு விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!
Wednesday, December 28th, 2022
அம்பேவளை பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்டுள்ள 30 ஏக்கர் காணியை உடனடியாக குறித்த பண்ணைக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அத்துடன் குறித்த காணியை, பசுக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுத்தல் வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கு மக்களின் உற்பத்திப்பொருட்கள் இடைத்தரகரின் சுரண்டலின்றி விற்பனை
யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!
ஆபாச கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து - நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம...
|
|
|


