3 இலட்சம் பேர் விண்ணபம் – பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!
Monday, February 24th, 2020
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 3 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒரு லட்சம் பேர் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த பல பணிக்குழுவில் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விவாதிக்க அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திருத்தியமைக்கப்பட்ட புதிய வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
வெளிநாட்டு சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 40 பேர் ஜூலையில் உள்ளீர்க்கப்படுவர் - வெளிவிவகார அமைச...
வெளிநாட்டு சேவைக்கு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - வெளிவிவகார அ...
|
|
|


