3 ஆவது டோஸின் தேவை குறித்து ஒக்டோபரில் ஆராயப்படும்!
Wednesday, August 25th, 2021
ஒக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான 3 ஆவது டோஸின் தேவை தொடர்பில் ஆராயப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒக்டோபர் மாதம் அளவில் நாட்டின் சகலருக்கும் தடுப்பூசியை ஏற்றும் பணியை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாதம் இறுதியளவில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்குத் திட்டமிட்டிருக்கின்றது.
தற்சமயம் ஒரு கோடி 20 இலட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் ஏற்றப்பட்டிருக்கின்றது.
இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 60 இலட்சத்தைக் கடந்திருப்பதாகவும் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாவற்குழி பகுதி மக்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைக்கு தீர்வு!
தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் - தேர்தல் ஆணைக்குழு!
தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆண...
|
|
|


