3 ஆயிரம் பாடசாலைகளை மீண்டும் திறக்க பரிந்துரை – மாணவர்களுக்காக விரைவில் 40 இலட்சம் ‘பைஸர்’ தடுப்பூசி கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021

40 இலட்சம் ‘பைஸர்’ தடுப்பூசி கூடிய விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இந்தத் தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர் பாடசாலையை மீளத் திறப்பதற்கு பல கட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே

200 க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா தடுப்பு செயலணியுடன் இணைந்த இந்தக் குழுவால் எட்டப்பட்ட பரிந்துரைகள் செப்டம்பர் 17 ஆம் திகதி வெளிளிக்கிழமை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புறங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் பாடசாலைகளை ஆரம்பத்தில் மீண்டும் திறக்க முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் குறித்த பாடசாலைகளை முறையான ஒரு திட்டத்தின் கீழ் திறக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சருக்கு வழங்கிய பரிந்துரையில் குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை 12 – தொடக்கம் 18 வரையான வயதுடைய மாணவர்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையின்படி பைசர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற பரிந்துரையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கதினால் முன்வைக்கப்பட்டது.

அதன்படி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு பைசர் தடுப்பூசியின் 4 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: