260 தேர்தல் முறைப்பாடுகள் இதுவரை 222 நபர்கள் கைது!

Saturday, January 27th, 2018

உள்@ராட்சி சபைத் தேர்தலுக்கான விதிமுறைகளை மீறிய 106 சம்பவங்களும் 260 தேர்தல் முறைப்பாடுகளும் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதுடன் 222 சந்தேக நபர்களும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பதாகைகள், சுவரொட்டிகள், கட்சிக் கொடிகளைக் காட்சிப்படுத்தி வாகனங்களைச் செலுத்தியமை மற்றும் அவற்றை வைத்திருந்தமை, சட்டவிரோத ஊர்வலங்களை நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமை தொடர்பிலேயே 222 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்கிக் காயப்படுத்தியமை, அச்சுறுத்தியமை, பீதியை ஏற்படுத்தியமை உள்ளிட்ட தேர்தல் குற்றச்சாட்டுக்கள் 260 கிடைத்துள்ளதாகவும் 106 தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts:

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பூம்புகார் பகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிகள் வழங்கிவைப்பு...
சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஜனாதிபதி தலைமையில் விசேட  கூட்டம்!
நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது சினோபெக் நிறுவனம் - அமைச்...