2500 வைத்தியர்கள் புதிதாக சேவையில் – சுகாதார அமைச்சு திட்டம் வகுப்பு என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Wednesday, March 1st, 2023
நாடளாவிய ரீதியில் அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் டாக்டர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக புதிதாக 2500 டாக்டர்களை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி நியமனம் தொடர்பில் நிதியமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் நிதியமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் டாக்டர்கள் நியமனம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீசந்ரகுப்த தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், நாடளாவிய வைத்தியசாலைகளில் நிலவும் டாக்டர்கள் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்திசெய்ய முடியுமென்றும் சில துறைகளில் விசேட மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சைபர் தாக்குதல்: உலகின் 99 நாடுகளில்கணினிகள் முடக்கப்பட்டு கப்பம் கோரப்பட்டது!
உயர்தரப்பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் வரலாற்று ரீதியாக சாதனை!
வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி அம்மனின் தேர்!
|
|
|


