25 ஆம் திகதிமுதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமுகமளிப்பர் – கல்வி அமைச்சின் செயலாளர் நம்பிக்கை!

எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமூகமளிப்பார்கள் என தான் நம்புவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளைமுதல் நான்கு கட்டங்களாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை தொடர்பில் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் ஆசிரியர்கள் சேவைக்கு சமுகமளிக்காமை தொடர்பில் எவ்வித மனக்கசப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அன்பான தீர்மானம் ஒன்றை நோக்கி பயணிக்க தான் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
காசோலை மோசடி முறைப்பாடுகளுக்கு உடனடி நடவடிக்கை - யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு!
மீண்டும் 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு - வர்த்தமானி வெளியீடு!
வாரணாசி பகுதியில் வேட்பாளராக பிரதமர் மோடி அறிவிப்பு - உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய்...
|
|