22 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படாது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!
Monday, July 22nd, 2024
22 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்து என அவைத்தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரலில் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணை உள்ளடக்கப்படவில்லை.
22 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்து.
இதேநேரம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தற்போதைக்கு வராது என நினைக்கிறேன். இந்த திருத்தம் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் அதனால் தேர்தல் பாதிக்கப்படாது. என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தென்னிலங்கை மீனவர்களுக்கு உள்ளூர் மீனவர்கள் ஒத்துழைப்பு - குற்றம் சாட்டும் அதிகாரிகள்!
தடையின்றி லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 வீதம் அதிகரிப்பு - உலக சுகா...
|
|
|


