21 ஆம் திகதிக்கு பின்னர் வழமைப்போல பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
Sunday, October 17th, 2021
இம்மாதம் 21 ஆம் திகதிக்கு பின்னர் வழமைப்போல பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எனினும், அதன்பின்பும் பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டால், சிறப்பு அனுமதியுடன் குறைந்தபட்சம் ஒரு சில பேருந்துகளையாவது மாகாணங்களுக்கு இடையே இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து பல்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அவ்வாறான பேருந்துகள் சில பாதுகாப்பு படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு 215 தமிழர் தகுதி!
புதிதாக 23 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்!
நெல் சந்தைப்படுத்த நடவடிக்கை!
|
|
|


