2023 இல் விபத்தில் சிக்கி, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
Friday, February 9th, 2024
கடந்த 2023ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த வருடம் விபத்துக்களில் சிக்கிய நிலையில் 1,559 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எவ்வாறு இருப்பினும் அவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜனாதிபதியை இன்று சந்திக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
மீண்டும் ஜீ எஸ் பி வரிச்சலுகை!
வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்றுறுதி!
|
|
|


