2023 ஆம் ஆண்டில் 1769 போலி நாணயத்தாள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கையில் தகவல்!

Friday, May 3rd, 2024

இலங்கையில் 2023ஆம் ஆண்டில் 1769 போலி நாணயத்தாள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது

குறித்த அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் 1769 போலி நாணயத்தாள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலி நாணயத்தாள்கள் தொடர்பிலான 11 நீதிமன்ற வழக்குகளுக்கு இலங்கை மத்திய வங்கி முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் புழக்கத்திலுள்ள மில்லியன் நாணயத்தாள்களுள் 1.4 வீதமான போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புழக்கத்தில் காணப்படும் போலி நாணயத்தாள்களை கண்டுபிடிப்பது தொடர்பிலான அறிவை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்கள்,பாடாசாலை மாணவர்கள்,நீதியை செயற்படுத்தும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: