2022 ஆம் ஆண்டு இலங்கை மாத்திரம் அன்றி பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது – சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிப்பு!
Monday, November 13th, 2023
2022 ஆம் ஆண்டு இலங்கை மாத்திரம் அன்றி பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இரு நாடுகளும் மேற்கொண்ட நடவடிக்கைள் மற்றும் அதன் விளைவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுவதாக சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நிலையான பொருளாதார மீட்சியை இலங்கை விரைவாக மேற்கொண்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இலங்கையுடன் ஒப்பிடுகையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் விளிம்பு நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் ஸ்திரமின்மை பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரட்டை இலக்க பணவீக்கம், உணவுப் பற்றாக்குறை, அதிகரித்துவரும் வெளிநாட்டுக்கு கடன், அதிக பாதுகாப்பு செலவுகள், ஊழல், வெளிப்புற ஸ்திரத்தன்மை மற்றும் காலநிலை தொடர்பான பாதிப்புகள் ஆகியவை பாகிஸ்தானின் பொருளாதாரத்தை கடுமையான சவாலுக்கு உள்ளாகியுள்ளன.
ரூபாவின் விரைவான பெருமதியிழப்பு மற்றும் எரிபொருள் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு ஆகியவை நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை மோசமாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் சமூக மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை காரணமாக 28.3 வீத பணவீக்கத்துடன் போராடியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாகிஸ்தான் வெளிநாட்டுக் கடன் வசதிகளை மீள செலுத்தும் அபாயத்தினை எதிர்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் சர்வதேச ரீதியில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


