2022 ஆம் ஆண்டின் முதலாவது சட்டத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!
Thursday, February 17th, 2022
மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 14 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 08 ஆம் திகதி இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், திருத்தங்களுடன் இது நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதன் ஊடாக 1981 ஆம் ஆண்டு 66ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் எனப் பெயர் மாற்றம் பெறுவது உள்ளிட்ட திருத்தங்களுக்கு உள்ளாகிறது.
இதற்கமைய 2022 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தச்) சட்டம் 14 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


