2020 நாடாளுமன்ற தேர்தல் : முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெளியாகும் – மஹிந்த தேசப்பிரிய!
Wednesday, July 1st, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
வழமையாக தேர்தல் நிறைவடைந்து மாலை 5 மணிமுதல் 6 மணிவரையான காலப்பகுதிக்குள் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
ஆனால் இம்முறை மறுதினம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து ஏற்பட்ட பெரும் இழுபறிகளுக்கு மத்தியில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சை மண்டபங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சு நடவடிக்கை!
வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு 15, ஆயிரம் அமெரிக்க டொலர் காப்புறுதி - ஜனவரிமுதல் நடைமுறை ...
இதுவரை வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவ...
|
|
|


