2019 உலகக் கிண்ணம் : இலங்கையின் ஒளிபரப்பு உரிமம் ரூபவாஹினிக்கு!
Friday, May 24th, 2019
இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடரினை இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஒளிபரப்ப இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதனிடையே இலங்கையில் வானொலி ஒலிபரப்பு பங்குதாரிகளாக சித எப்.எம். இற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டிகளின் விசேட தருணங்களை ஒளிபரப்ப (Video Clips) ‘த பபரே’ இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை உலகக் கிண்ண போட்டிகள் மே 30ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச ஊடகங்களை மக்கள் சேவை ஊடகங்களாக மாற்ற நடவடிக்கை!
அனைத்து திரிபடைந்த கொரோனான வைரஸ்களினாலும் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் தடுப்பூசிக்கு உண...
தென் ஆசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்பு சட்டம் விரைவில் இலங்கையில் அமுல்படுத்தப்படும் - ஜனாதிபதி ரணில் ...
|
|
|


