2016 -2017 பல்கலைக்கழக கல்வி ஆண்டு மாணவர்களுக்கான விபரங்கள் அடுத்தவாரம்!

Saturday, June 10th, 2017

2016 -2017 கல்வி ஆண்டுகளுக்காக கங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான விபரங்கள் அடங்கிய கடிதம் அடுத்தவாரம் தபாலில் சேர்க்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழம், பாடநெறி போன்ற விடயங்கள் அடங்கியிருக்கும். இதற்காக பதிவு செய்துகொள்வது அவசியமாகும். இணையத்தளத்திலும் இதற்கான வசதி காணப்படுகிறது. பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 29 ஆயிரத்து 699 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

14 பல்கலைக்கழகங்கள், மூன்று வளாகங்கள், ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் என்பனவற்றுக்கான 109 பாடநெறிகளை தொடர இந்த மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். வர்த்தகம் விஞ்ஞானம் என்ற பாடநெறி மொறட்டுவ பல்கலைக்கழத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 100 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

 

Related posts: