20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் சுட்டிக்காட்டு!
Thursday, July 27th, 2023
சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
சில உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வாக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஏனைய அதிகாரிகளின் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சூரியசக்தியின் மூலம் மின்சாரத்தை பிறப்பிக்கத்திற்கான சட்ட ரீதியான தடைகள் நீக்கம்!
அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை!
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் உள்ள கைதிகளை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப திட்டம்...
|
|
|


