20,000 பட்டதாரிகளுக்கு ஜுலை 2 முதல் நியமனம்!

எதிர்வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதி முதல் 20 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வேலையற்ற பட்டதாரிகள் சுமார் 57 ஆயிரம் பேருக்கும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைக்கப்படவேண்டும் என வலியுறுத்திப் பட்டதாரிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் அரசு தனது தீர்மானத்தில் உறுதியாகவுள்ளது.
ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதல் மே மாதம் 5 ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றன. அதில் சுமார் 57 ஆயிரம் பட்டதாரிகள் சமகமளித்தனர்.
இதன் இறுதிப் பெறுபேறுகள் அமைச்சுக்குக் கிடைத்தன. கோரப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் 20 ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன கூறினார்.
Related posts:
|
|