20 கட்சிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!

இனத்துவ மற்றும் வர்க்க அடிப்படையில் செயற்படும் கட்சிகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூன் 6ம் திகதியன்று உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது..
ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுபலசேனா, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, நவ சிஹல உறுமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இனத்துவ மற்றும் வர்க்க அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவ்வாறான 20கட்சிகள் தமது பெயர்களுக்கான நியாயத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக் 2016
இலங்கை - கொரியா இடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு 40 வருடங்கள் நிறைவையொட்டி கொரிய வாரம் பிரகடனம்!
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கை புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்கவில்லை!
|
|