20 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பம் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!
Monday, May 18th, 2020
தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல எதிர்ப்பார்த்துள்ள இலங்கையர்களை பதிவு செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் முதல் கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளுக்கான தொழில்வாய்ப்புக்கான அனுமதி வழங்கப்படவுள்ளது என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்தியகிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுக்கு தொழில் வாய்ப்பிற்கு செல்வது குறித்த பதிவு செய்யும் நடவடிக்கை பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாகவும் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கையில் சுவிஸ் நட்சத்திர ஹோட்டல் திறப்பு!
வடக்கு - கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!
அரச வைத்தியசாலைகளில் கட்டாயமாக நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் தி...
|
|
|


