2.9 பில்லியன் டொலர் கடனுதவியின் – சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த மாதம் 6 ஆம் திகதி கூடும் – நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவிப்பு!
Tuesday, November 21st, 2023
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுதவியின் இரண்டாம் தவணை தொடர்பில் தீர்மானிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த மாதம் 6 ஆம் திகதி கூடவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, அந்தச் சந்திப்பின் பின்னர் இரண்டாவது கடனாக கிட்டத்தட்ட 330 மில்லியன் டொலர்கள் பெறப்படும் என செயலாளர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், சீனாவைத் தவிர ஏனைய இருதரப்புக் கடனாளிகளான இந்தியா, ஜப்பான் மற்றும் பரிஸ் சமூகத்துடன் தொடர்புடைய நாடுகள், அடுத்த வாரம் தமது இறுதிக் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளை இலங்கைக்கு அறிவிக்கவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது
000
Related posts:
வீசா தொடர்பில் இலங்கை - கட்டார் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு நடவடிக்கை!
வட்டிக் கடன் திட்டங்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி!
நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – சுதந்திர தின உரை...
|
|
|


