2 ஆம் தர நகரங்களாக மாற்றமடைகின்றன 25 உள்ளூராட்சி சபைகள்!

Saturday, January 27th, 2018

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்புடன் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் உள்ள உள்ளூராட்சிச் சபைகளில் தலா ஒன்று வீதம் தெரிவு செய்யப்பட்ட 25 உள்ளூராட்சி சபைகள் இரண்டாம் தர நகரங்களாக மாற்றப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி நகர சபையும் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையும் வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர சபையும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபையும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

நகர மைய அபிவிருத்தி, போக்குவரத்து முகாமைத்துவம், வடிகால் அமைப்பு, திண்மக் கழிவகற்றல் திட்டம், பொதுக் கட்டடங்கள் மற்றும் சந்தை அபிவிருத்தி, சுற்றுலா மையம், சாலைகள் பாலங்கள் புனரமைப்பு, குடியிருப்புக்கள் மற்றும் தொழில் நிலையங்களின் அபிவிருத்தி, குடிநீர் விநியோகம், ஒன்றிணைந்த செயற்பாடு போன்ற பத்து திட்டங்கள் இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன என அமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிறி அறிவித்துள்ளார். இதன் பிரகாரம் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் தெகிவளை கல்கிசை மாநகரசபை, கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மாநகரசபை, களுத்துறை மாவட்டத்தில் பேருவளை நகரசபை.

தென் மாகாணத்தில் காலி மாவட்டத்தில் அம்பலாங்கொட நகரசபை, மாத்தறை மாவட்டத்தில் மாத்தறை நகரசபை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை நகரசபை.

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் கம்பளை நகரசபை, மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை நகரசபை, நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன் டிக்கோயா நகரசபை.

சப்பிரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டி நகரசபை, கேகாலை மாவட்டத்தில் கேகாலை நகரசபை.வடமேல் மாகாணத்தில் குருணாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி நகரசபை, புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகரசபை.

வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ பிரதேசசபை, பொலநறுவை மாவட்டத்தில் இங்கிராங்கொட பிரதேசசபை.ஊவா மாகாணத்தில் மொனராகல மாவட்டத்தில் மொனராகல பிரதேசசபை, பதுளை மாவட்டத்தில் பண்டாவளை மாநகரசபை.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரசபை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரசபை.ஆகியவை தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: