19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் – சில மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பல மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
Friday, October 14th, 2022
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் தளம்பல் நிலைமை தொடரும் எனவும் அதனால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் பெய்யும் வேளைகளில், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இதனிடையே களுத்துறை மாவட்டத்தில் ஹொரண மற்றும் இங்கிரிய பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் கிட்டத்தட்ட 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தின் ஹெகொடவில் 142.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் அவிசாவளை பென்ரித் தோட்டத்தில் 122.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இதேநேரம், கம்பஹா மாவட்டத்தின் மேல்கோபிவத்த பிரதேசத்தில் 121 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதேவேளை, நாட்டில் உருவாகியுள்ள மழையுடனான காலநிலை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்தத் திணைக்களம் சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல இடங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை அதிகாலை 2.15 மணி முதல் இன்று வரையான காலப்பகுதியில் பரவலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் கடந்த புதன்கிழமை காலை 8.30 வரையான 24 மணி நேரத்தில் ஆணையிறவில் 18.6 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதுடன் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 10 மி.மீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவானதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


