18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரை!

Thursday, September 9th, 2021

18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சினோபோர்ம் கொரோனா தடுப்பூசியை வழங்க இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.

எந்த தீவிர நோய்களாலும் பாதிக்கப்படாதவர்களுக்கு செலுத்த சினோபோர்ம் தடுப்பூசியை பயன்படுத்தப்படலாம் எனவும் அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வயது பிரிவில் இருப்பவர்களுக்கு தீவிர நோய்கள் இருந்தால், அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பைசர், மொடர்னா அல்லது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 30 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமைமுதல் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பைசர், மொடர்னா, அல்லது அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 வது மருந்தாக வழங்க பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: