175,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி ஏலத்தில் விட நடவடிக்கை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 75 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,
364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
விலை அதிகரிப்பு சட்டவிரோதமானது!
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை...
காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் – பொதுமக்களிடம் சுகாதார...
|
|