17 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிப்பு!

நாட்டில் 17 மாவட்டங்கள் வறட்சியால் கடுமையான நெருக்கடிக்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் மூன்று இலட்சம் குடும்பங்களை சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வறட்சியால் வட.மாகாணம் கூடுதலான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 462,815 மக்கள் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். வட மாகாணத்தை அடுத்து கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
Related posts:
யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக டக்ளஸ் தேவானந்தாவின் அ...
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கையளிப்பு – இராஜாங்க அமைச்சர் ...
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது - நாட்டு மக்களின் அர்ப்பணிப்புக்கு பலன் கிடைக்கும்...
|
|