15ஆம் திகதி முதல் காத்திருப்பு பட்டியலிலுள்ள சமுர்த்தி பயனர்களுக்கான 5,000 ரூபா வழங்க ஏற்பாடு!
Monday, April 13th, 2020
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் காத்திருப்பு பட்டியலிலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான 5 ,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
அத்துடன் இதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
கிராம மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் கிராம மட்டத்தின் பரிந்துரைக்கமைய, பாடசாலை வேன் உரிமையாளர்கள்,முச்சக்கர வண்டி சாரதிகள், சுய தொழலில் ஈடுபடுவோருக்கும் கொடுப்பனவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கையில் - எதிர்வரும் 30 ஆம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு!
இலங்கையில் 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் புதுப்பிக்கப்பட்ட...
|
|
|


