14 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று ஆரம்பம்!
Friday, January 19th, 2024
14 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் முற்றவெளியிலே காலை 10:30 மணிக்கு ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி சனிக்கிழமை (20) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி ந.கெங்காதரன், யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தினர்,
இந்திய துனைத் தூதரக அதிகாரிகள் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மூன்று தினங்களும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் கண்காட்சி நடைபெறும்.
யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்த்துறை மன்றத்துடன் இணைந்து, வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனத்தினால் குறித்த வர்த்தக சந்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 300 க்கும் மேற்பட்ட காட்சி கூடங்கள் சந்தையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


