13 ஆவது கொரோனா மரணம் பதிவானது இலங்கையில்!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த நபர் செப்டம்பர் 9 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் சட்ட உதவி அலுவலகம் அங்குரார்ப்பணம்!
தேர்தலுடன் தொடர்புடைய பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் ஆரம்பம் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள - இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறு...
|
|
இலங்கைக்கான உதவிகளை அணிதிரட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் ஆதரவு வழங்கப்படும் - அமைச்சர் அலி சப்ர...
பிக் மீ செயலி ஊடாக சேவையில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி மீது யாழ் நகர தரிப்பிட சாரதிகள் தாக்குதல் ...
“வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை COP28 மாநாட்டில் முன்வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்...