13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய மாகாணசபைகளின் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வதத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான முக்கிய கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய மாகாணசபைகளின் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் இது விடயம் தொடர்பிலான தீர்மானமும் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களுக்கு முன்னர் சட்டமாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான முக்கிய கட்டளை சட்டங்களான மாநகரசபை கட்டளை சட்டம் , நகரசபை கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேசசபை சட்டம் போன்றவற்றை புதுப்பிப்பதற்காக சட்ட வரைஞரால் குறித்த சட்ட மூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சட்ட மூலத்தில் மேலும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை சட்டமா அதிபரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திருத்தங்கள் உள்ளடங்கலாக, மேலும் திருத்தியமைத்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் 154 (எ) உறுப்புரைக்கமைய மாகாணசபைகளின் நிலைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கு அரச சேவைகள் , மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|