12ஆம் திகதிக்கு முன் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரும்!

Wednesday, December 28th, 2016

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஜனவரி மாதம் 12ம் திகதிக்கு முன்னதாக, வெளியிடப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ. எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை பரீட்சைப் பெறுபேறுகள் தாமதமடைவதாக சில தரப்பினர் பல்வேறு விமர்சனங்களை எழுப்பினர்.

எதுஎவ்வாறு இருப்பினும், அவ்வாறு குறிப்பிடத்தக்களவு தாமதம் ஏற்படவில்லை எனக் கூறிய பரீட்சைகள் ஆணையாளர், இம்முறை தொழிநுட்ப விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 30,000க்கும் அதிகம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய இவர்களது நடைமுறைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அதிக காலம் எடுத்துக் கொண்டதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2015ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டது 2016ம் ஆண்டு ஜனவரி 3ம் திகதியே எனவும் புஸ்பகுமார மேலும் கூறியுள்ளார்.

இதற்கமைய இம்முறை பெறுபேறுகள் தாமதமாவதாக வௌியான தகவல்கள் ஆதாரமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

exam_dept_0

Related posts: